உள்ளார்ந்த விழிப்புணர்வும், புறரீதியான பிரக்ஞையுணர்வும் மனிதர்களின் உள்இயக்கமானக் கலைத்தன்மையைத் துலங்கச்செய்யும் என்பதனை இக்கட்டுரைகள் உணர்த்துகின்றன.
செந்திலின் வாசிப்பு அணுகுமுறையானது இலக்கியப் படைப்பொன்றின் உள்ளடக்கத்தில், அதன் பெறுமானம் எத்தகையதாக அமைந்துள்ளது என்பதையே பிரதானப்படுத்துகிறது.
எழுத்துக்கள் மீதும் எழுத்தாளர்கள் மீதும் முதன்மைக் கவனமும் தீவிரமான பற்றுதியும் ஈடுபாடும் கொண்டவராகவே காணப்படுகிறார்.
கலைரசனை, தர்க்கம், இலக்கியம், வெளிப்படும் ஆற்றல் போன்றவை ஒரு படைப்பாக்கத்தில் உள்செறிவாக அமைந்துள்ளதைப் பொறுத்தே அதனை அவர் பரிந்துரைக்கவும் நிராகரிக்கவும் செய்கிறார். கே.என். செந்தில் சமகாலத்தில் துல்லியமான, நேர்மையான விமர்சனப் பார்வையைக் கொண்டவர் எனக் கருத முடியும்.
- அனார்
Be the first to rate this book.