இயற்கையோடும் வாழ்வின் எளிய அழகுகளோடும் தன்னைப் பிணைத்துக் கொள்பவை தென்றலின் கவிதைகள். ஒரு வனாந்தரத்தில் பட்டாம்பூச்சியைத் துரத்திக் கொண்டு அலையும் சிறுமியின் குதூகலமும் பேதமையும் இக்கவிதைகளை ஒளி மிகுந்ததாக மாற்றுகின்றன. கவித்துவத்தின் ஊற்றுக்கண்ணாகிய குழந்தைமையை எல்லாச் சந்தர்ப்பத்திலும் நெருங்கிச் செல்ல முயலும் தென்றலின் முதல் தொகுப்பு இது.
Be the first to rate this book.