குறுங்கதைகளே கவிதைகள் என்று ஆகிவிட்ட காலத்தில் உணர்வுகளின் சலனங்களைத் துல்லியம் குறையாமல் பதிவு செய்கிறது ‘நீளா’. தமிழ் நவீன கவிதையின் வழமையான சொற்றொடர்களை உதிர்த்து புத்தெழுச்சியான அழைப்புகளையும் தொனிகளையும் ஏற்கிறது. தயக்கமான கவித்துவத்தைக் கடக்கிறது.
பெண் பாலிமையின் இயல்புகளையும் ஊக்கங்களையும் அதன் அளப்பரிய ஆற்றலையும் படைக்க முயல்கிறது. அதன் அறமும் இயக்கமும் குறித்த பார்வைகளும் கேள்விகளும் இன்றைய நாளின் விவாத மையம் ஆகியிருக்கையில் பெண் பாத்திரங்கள் குறியீடுகளாகின்றன.
‘நீளா’ கிட்டத்தட்ட பெண் கவிதைகளின் உலகத்தை மூர்க்கமாக முட்டுகிறது. நுழைகிறது. இதுதானே ஆண் என்பவன் தன் பாலிமையைக் கடக்கும் மலைப்பாதையாக இருக்க முடியும்.
-குட்டி ரேவதி
Be the first to rate this book.