சாதி அடிப்படியில் இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது, கல்வி மற்றும் சமய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது ஆகியவை நீதிக்கட்சி அரசுகளின் குறிப்பிடத்தக்க செயல்கள். நீதிக்கட்சி ஆட்சிகாலத்தில் ஆந்திரப் பல்கலைக்கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டன. சென்னை நகரின் தற்கால தி.நகர்ப் பகுதி நீதிக்கட்சி அரசுகளால் உருவாக்கப்பட்டது. எதிர்க்கட்சியாக இருந்தபோது 1937–40 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது. 1967 இலிருந்து தமிழ் நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றுக்கு நீதிகட்சியும் திராவிடர் கழகமும் கொள்கை மற்றும் அரசியல் ரீதியாக முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன.
தற்போது நீதிக்கட்சி குறித்த தவறான பார்வையால் பொய்யும், புனைவும் பெருகி வரும் இந்நாளில் நீதிக்கட்சியைப் பற்றி அறிந்துகொள்ள இந்நூல் அவசியமாகிறது!
Be the first to rate this book.