இந்தியாவின் மிக உயர்ந்த நீதி அமைப்பானது உரிமைகளைத் தீர்மானிக்கும் இறுதி நடுவர் என்ற பங்கைத் தானே வரித்துக் கொண்டது மட்டுமல்லாமல், பொது மக்கள் தங்கள் உரிமை களைச் செயல்படுத்துவதற்கான கடைசிப் புகலிடமாகவும் திகழ்கிறது. எனினும், நீதித்துறை உறுதியாகவும் விரைவாகவும் பொதுமக்களின் உதவிக்கு வரத் தயங்கும்போக்கு அதிகரிப்பதும், இந்தியாவில் உள்ள பொது நிறுவனங்களின் தேய்வும் மக்களி டையே ஆழமான கவலைகளை எழுப்பியுள்ளன. அரசின் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்த நீதித்துறையைவிட்டால் அவர்கள் வேறு எங்கு செல்வார்கள்?
சமீப காலங்களில், நீதித்துறையின் தோல்விகளுக்குக் காரணம் அதற்குத் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களே என்று குற்றம் சாட்டும் போக்கு காணப்படுகிறது. அந்தப் போக்குக்கு மாறாக, கல்விப்புல ஆய்வின் தீவிரத்தோடும் அதே சமயம் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய மொழியிலும் எழுதப்பட்டிருக்கும் ரவிக்குமாரின் இந்த நீதித்துறையின் சிக்கலுக்கான காரணம் சம்பவங்கள் கட்டமைப்பு நூல் சார்ந்ததல்ல, ரீதியானது என்பதை எடுத்துக் கூறுகிறது. அது
இந்திய நீதித்துறையின் சில அம்சங்களையும் அது தற்போது பயணிக்கத் தொடங்கியிருக்கும் பாதையையும் புரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் இந்தப் புத்தகம் அறிமுகமாகும். நல்ல
சுருதிசாகர் யாமுனன்
பத்திரிகையாளர்
Be the first to rate this book.