ஃபிராங்க் தாஷ்லின்
கடந்த நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த அமெரிக்க ஓவியர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர். அவர் எழுதி, வரைந்த மூன்று குழந்தைப் புத்தகங்களில் முக்கியமானது இந்தப் புத்தகத்தின் ஆங்கில வடிவமான 'The Bear That Wasn't'.
ஆதி வள்ளியப்பன்
பத்திரிகையாளர். சுற்றுச்சூழல், குழந்தைகள், அறிவியல் சார்ந்து தொடர்ச்சியாக எழுதிவருபவர். 'எப்படி? எப்படி?' ('கலை இலக்கியப் பெருமன்ற விருது' பெற்ற அறிவியல் கேள்வி-பதில் நூல்), 'வீரம் விளைந்தது' (இளையோர் பதிப்பு), 'குழந்தைகளுக்கு லெனின் கதை', 'இளையோருக்கு மார்க்ஸ் கதை' உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.
**
ஒரு நாள் ஒரு கரடி விழித்து எழுந்தபோது, தான் ஒரு தொழிற்சாலை வளாகத்துக்குள்இருப்பதை உணர்கிறது. அங்கிருக்கும் அதிகாரிகளோ அதுவும் ஒரு தொழிற்சாலை ஊழியர்தான் என்று சொல்லி, அந்தக் கரடியும் அங்கே வேலைபார்க்க வேண்டுமென்று நெருக்கடி தருகிறார்கள். 'தான் ஒரு காட்டுக் கரடி' என்று அது மீண்டும் மீண்டும் சொன்னபிறகும், அதை அவர்கள்ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு வழியில்லாமல் அந்தக் கரடி தொழிற்சாலையில் வேலை பார்க்க ஆரம்பிக்கிறது. தொடர்ந்து அது வேலை பார்த்ததா, அதற்குப் பிறகு அந்தக் கரடிக்கு நடந்தது என்ன?
Be the first to rate this book.