முஸ்லிமாக இருப்பதற்கு ‘இஸ்லாம் என்றால் என்ன?’ என்பதைத் தெரிந்து கொள்வது எந்தளவு அவசியமோ அதே அளவு ‘இஸ்லாம் என்றால் எது இல்லை?’ என்பதைத் தெரிந்து கொள்வதும் அவசியம் ஆகும். இல்லாவிட்டால் இஸ்லாத்தை அதன் தனிப்பட்ட தூயவடிவில் பாதுகாப்பதோ, பின்பற்றுவதோ இயலாது போய்விடும்... ‘எது எது இஸ்லாம் இல்லை’ – என்பதில் ‘நிஃபாக்’ ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. இது ஒரு வேண்டாத வேலை என்பதோடு அபாயகரமான வேலை என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் இதைப்படித்த பிறகு நிறைய பேர் கொதிப்படையவும் வாய்ப்பிருக்கிறது. ஆனாலும், தீனுடைய நலத்தைக் கருத்தில் கொள்ளும் போது இந்த அபாயத்தை, சகித்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
- மௌலானா சத்ருத்தீன் இஸ்லாஹி
Be the first to rate this book.