ஆதி காலந்தொட்டு பெண்களை போகப் பொருளாக மட்டுமே பயன்படுத்தும் வழமை பெரும்பாலும் இன்று வரை தொடர்ந்த வண்ணமாகத்தான் இருக்கிறது. ஆண் மட்டுமே ஒரு பெண்ணின் வாழ்விற்கு ஆதாரம் என்று தாய்ப்பாலுடனேயே ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறது. பல வேளைகளில் இது பெண் அடிமைத்தனம் என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்து விடுகிறது. தாய்மை என்ற அந்த பண்பு ஒரு பெண்ணிற்கு மகுடமாக இருப்பது. அது மட்டுமே அவளுடைய திருமண வாழ்க்கையின் ஆதாரமாக இருக்கிறது.
ஆண்கள் செய்யக்கூடிய சில காரியங்கள் பெண்களால் செய்ய முடியாமல் போகலாம் என்பதற்கு அவர்களின் உடல்வாகு மட்டுமே காரணமாக இருக்கலாம். பாலின பாகுபாடு என்பது உயிரியல் சார்ந்த நிகழ்வாக மட்டுமே இருக்கக்கூடியது.
பெண் எனும் பெரும் சக்தி’ என்ற என்னுடைய இந்த நூல் நம் இந்திய சமூகச் சூழலில் கற்காலம் தொட்டு, இன்றைய நவீன காலம் வரையிலான பெண்களின் கனவுகள், இலட்சியங்கள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், சாதனைகள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக இருக்கும். மிகப்பிரபலமான பெண்களின் வரலாறுகளை மட்டுமே உதாரணமாக எடுத்துக்கொண்டிருப்பதற்கான காரணங்கள், அவர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்பதோடு, ’ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்ற அடிப்படையிலும்தான். ஒரு சமுதாயத்தில் பெண்களின் நிலையைக் கொண்டுதான் அதன் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியைப் பற்றி கணக்கெடுக்க முடியும் என்பதே நிதர்சனம். இதன் அடிப்படையில் ஆழ்ந்து அலசப்பட்ட சாரத்தின் தொகுப்பே இந்நூல்.
Be the first to rate this book.