நக்சலைட் கள் மாபெரும் தியாகிகள், இல்லை பயங்கர வாதிகள்,இல்லை ராபின் வுட் போல தனிநபர் சாகச வாதிகள் என்று மனம்போன போக்கில் சித்தரிப்பது தமிழ் இலக்கியத்திலும் சினிமாவிலும் வழக்கமாக உள்ளது. (மா லெ அமைப்பில் பணிபுரிந்த சில தோழர்களின் எழுத்துக்கள் விதிவிலக்கான வை). அப்படியொரு சினிமா பார்த்து வந்த கோபத்தில் நக்சல் இயக்க வரலாற்றை உயிர்மை இதழில் தொடராக எழுதினேன். அவ்வப்போது முகநூலிலும் பதிவிட்டதை நண்பர்கள் நினைவு வைத்திருக்கக் கூடும். அக்கட்டுரை தொடரே இந்நூல். நக்சல் அமைப்பு எப்படி தோன்றியது, அதன் நோக்கம் என்ன, அமைப்பு வடிவம் என்ன? இன்றைய பரிணாம வளர்ச்சி என்ன, ஆகியவற்றை விவரிக்க முயன்று இருக்கிறேன். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகள் பற்றியே நூல் பேசுகிறது.
Be the first to rate this book.