1960ஆம் ஆண்டில் இருந்து தொடங்கி 1995ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தைந்து ஆண்டுகளில் தமிழில் எழுதப்பட்ட நவநவமான சிறுகதைகளின் தொகுப்பு நூல் நவீன தமிழ்ச் சிறுகதைகள். கருத்திலும், கதை சொல்லும் பாங்கிலும், மொழி நடையிலும் தனித்தன்மை மிளிரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து தொகுத்தவர் கொடுப்பது சா.கந்தசாமி. 1940ஆம் ஆண்டில் மயிலாடுதுறையில் பிறந்தவர். இளம் வயதில் எழுத ஆரம்பித்த இவரின் முக்கியமான படைப்பு சாயாவனம் நாவல்களோடு சிறுகதைகளையும் விமர்சனமும் எழுதி வருகிறவர். தொலைக்காட்சி தொடர், டாக்குமெண்ட்ரி இயக்குநர். சாகித்திய அகாதெமிக்காக ஜெயகாந்தன் பற்றி டாக்குமெண்ட்ரி எடுத்துள்ளார் விசாரணைக் கமிஷன் நாவலுக்காக 1998ஆம் ஆண்டில் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
5
Senthil murugan 25-12-2020 01:06 pm