சோறுபோட்டு ‘அகவல்’ பாடுவதையே வள்ளலாருக்குச் செய்யும் கைமாறாகக் கருதும் இந்த நாளிலும், ஆன்மநேய ஒருமைப்பாட்டுக்குத் தடையாக உள்ள எதையும் தயவு தாட்சண்யமின்றித் தூக்கியெறிந்து இந்தச் சமூகத்தைச் சீர்திருத்திய விஞ்ஞானி வள்ளலார் என்பதைப் புலப்படுத்த எழுதப்பட்டவையே இந்நூலிலுள்ள கட்டுரைகள். வள்ளலார் குறித்து ஏற்கனவே வந்துள்ள நூல்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது. வள்ளலாரை இந்த நூற்றாண்டில் புரிந்துகொள்ளுவதற்குக் கடந்த காலத்தில் நிகழ்ந்த ஆய்வுகளை விமர்சனபூர்வமாக அணுகவேண்டும் என்பதே இக்கட்டுரைகளின் ஊடுசரடு.
Be the first to rate this book.