காலனிய காலக் கல்வி குறித்துப் பேச, எழுத முற்படும் எவராயினும் மெக்காலே குறித்தும் அவரின் அறிக்கை குறித்தும் பேசாமலோ, எழுதாமலோ கடந்து செல்ல முடியாது. இந்தியத் துணைக்கண்டத்தின் கல்வி வரலாற்றில் தனக்கென்ற ஒரு தனி இடத்தினை ‘மெக்காலே அறிக்கை’ கொண்டுள்ளது. மெக்காலே அறிக்கையினைக் குறித்த ஒரு பெரும் பிம்பம் ஏற்கனவே நமது மத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் அவர் குறிப்பிடும் விசயங்களைவிட, அவர் குறிப்பிடாத பல விசயங்களை அவர் குறிப்பிட்டதாகக் கூறி பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் மெக்காலே குறிப்பிட்டது என்ன என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது முக்கியமானது.
Be the first to rate this book.