மொழி வரலாற்றில் இலக்கிய இலக்கணங்களை உருவாக்குவது போலவே அகராதி உருவாக்கமும் இன்றியமையாதாகும். அகராதி கருவி நூல்களாகும். சொற் பொருள்களின் வரலாற்றுப் போக்கினை அறிந்து கொள்வதற்குத் துணையாயிருப்பவை அகராதி நூல்களே. மொழிப் பயன்பாட்டில் அகராதியின் பங்களிப்பு மிகவும் பெரிது. ஆங்கில மொழியின் உச்சரிப்பு இந்த அகராதியில் உள்ள ஒவ்வொரு ஆங்கில சொல்லுக்கும் அதன் உச்சரிப்பு விதத்தை தமிழ் எழுத்துக்களில் தந்திருக்கிறோம். இங்கிலிஷ் மொழியின் உச்சரிப்பை 100% தமிழ் எழுத்துக்களில் மொழி பெயர்ப்பது கடினம் எனினும் தமிழ் வழி ஆங்கிலம் கற்போருக்கு உதவியாக இருக்கும் வகையில் எழுதியுள்ளார் இந்த அகராதியில் சொற்களின் முழுமையான பொருளை விளக்கிட ஒவ்வொரு பக்கத்திலும் பொருள் உணர்த்தும் படங்களை தந்துள்ளோம். 100 சொற்கள் சொல்லும் செய்தியை ஒரு படம் எளிதில் அறியத் தரும் என்பதற்கேற்ப படங்கள் நிறையவே இதில் இடம்பெற்றுள்ளன, இளைய தலைமுறைக்கு ஒரு புது வரவாக விளங்கும் வகையில் ஆசிரியர் எழுதியுள்ளார் இத்தொகுப்பினை
Be the first to rate this book.