சாரு நிவேதிதா எழுதும் சினிமா விமர்சனங்கள் தமிழ் சினிமாவை அதன் அழகியல் தளத்திலும் சமூகத்தளத்திலும் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துபவை. சர்வதேச சினிமாவின் தரத்தை நோக்கி நகர முயலும் புதிய முயற்சிகளை உற்சாகத்துடன் வரவேற்கும் சாரு, புதுமை என்ற பெயரில் உருவாக்கப்படும் பாசாங்குகளையும் படைப்பூக்கமற்ற வெற்று நகல்களையும் இக்கட்டுரைகளில் கடுமையாக நிராகரிக்கிறார். தமிழ் சினிமாவின் மொழியும் அடையாளமும் மெல்ல மாறிவரும் ஒரு காலகட்டத்தில் அந்த மாறுதலின் நுட்பங்களையும் சிக்கல்களையும் விமர்சன நோக்கில் இந்த நூல் பரிசீலனைக்கு ஆட்படுத்துகிறது.
Be the first to rate this book.