கில்லட்டின் காதலர், கலகக்காரர், போர்வெறி பிடித்தவர், சர்வாதிகாரி, சூழ்ச்சிக்காரர் என்று நெப்போலியன் பற்றிய நெகட்டிவ் பார்வைகள் நிறையவே உண்டு. மாவீரன், லட்சியவாதி, தன்னம்பிக்கைச் சக்கரவர்த்தி, போர் வித்தகர், காதலில் கரைகண்டவர் என்று பாஸிட்டிவ் விஷயங்களையும் பக்கம் பக்கமாகப் பேசலாம். உண்மையில் நெப்போலியன் யார்? லட்சியம் கண்ணை மறைக்க, ரத்தவெறி பிடித்து அலைந்தவரா? அல்லது சூழ்நிலை காரணமாக அப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவரா? வறுமையால் ஆளப்பட்டவரால், எப்படி உலகை ஆளும் பேரரசராக மாற முடிந்தது? இந்த வளர்ச்சி நேர்மையானதா? இல்லை, கூர்மையான வாளின் முனையால் கொண்டுவரப்பட்டதா? கிடுகிடுவென்று உச்சத்தை நோக்கிச் சென்ற நெப்போலியன், அதைவிட இருமடங்கு வேகத்தில் படுபாதாளத்தில் விழுந்து மறைந்தாரே, அந்த வீழ்ச்சியின் பின்னணி என்ன? இந்தக் கேள்விகளுக்குள்தான், நிஜமான நெப்போலியன் ஒளிந்திருக்கிறார். ஒரு மாமன்னரின் வாழ்க்கை மட்டுமல்ல இது. ஒரு சாமானிய சிப்பாய், பேரரசராக உயர்ந்த வெற்றிக்கதையும் கூட.
Be the first to rate this book.