பொதுவாக மனிதர்கள் தங்களுக்கு ஒன்றில் இலாபம் இருக்குமெனத் தெரிந்தால், வியாபாரக் கணக்குப் போட்டு அந்த இலாபத்தை அடைய முயற்சி செய்வார்கள். முதலீட்டையும் இலாபத்தையும் கவனித்து வருவார்கள். இலாபம் அதிகரிக்க அதிகரிக்க முதலீட்டையும் அதிகரிப்பார்கள். அதற்காகத் தங்கள் வருமானத்தில் சேமிப்பையும் உருவாக்குவார்கள். இந்த நூலில் ஒரு வித்தியாசம், நற்செயல்களை முதலீடு செய்வதால் கிடைக்கின்ற இலாபங்களின் கணக்கு சொல்லப்பட்டுள்ளன. நம்முடைய நன்மைகளின் வங்கியில் அவற்றைச் சேமிப்பதின் மூலம் என்றுமே இழப்பில்லாத ஒரு வியாபாரத்திற்கு வழிகாட்டப்பட்டுள்ளது. இந்த வியாபாரம் நம்மை அல்லாஹ்வின் திருப்திக்காக நம்மையே விற்றுவிடுவதாகும். இதனை வாசிப்பவருக்கு அந்த நற்செயல்களின்மீது ஆசை பிறக்கக்கூடும்.
Be the first to rate this book.