பல்லவப் பேரரசின் மன்னர்களில் ஒருவனான பரமேஸ்வர வர்மன், வாரிசு ஏதும் இல்லாமல் மறைந்தான். பின்னர் கிளை வழியில் அந்தப் பேரரசுக்கு தன் பன்னிரண்டு வயதில் மன்னன் ஆன நந்திவர்மனை மையமாகக்கொண்டு புனையப்பட்டுள்ளது இந்தப் புதினம். காஞ்சிபுரத்தைத் தலைமையகமாகக் கொண்டிருந்தாலும், கும்பகோணத்துக்கு அருகில் நந்திபுரத்தில் அழகான கோட்டை ஒன்றை நிர்மாணித்தான் நந்திவர்மன்.
சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தியன் கங்க மன்னனுடன் சேர்ந்து போர் நடத்தி, போர் தர்மத்தைப் புறந்தள்ளி, நந்திவர்மனைத் தோற்கடித்தான். போர்க்களத்தில் இருந்து தப்பித்த நந்திவர்மன், நந்திபுரத்தில் இரண்டு ஆண்டுகள் இருந்தபோது, அங்கு திருமங்கை ஆழ்வார் அறிவுரையின்பேரில் திருமாலுக்கு விண்ணகரம் எனும் கோயிலை எழுப்பினான். இரண்டு ஆண்டுகள் கழித்து தனது படைத் தளபதி உதயசந்திரனின் துணையுடன் சாளுக்கியர்களுடன் போரிட்டு அவர்களை பல்லவ தேசத்தில் இருந்து விரட்டி மீண்டும் ஆட்சிப்பரிபாலனம் செய்தான்.
இந்தக் கருவை மையமாகக்கொண்டு நந்திவர்மனுடன் சில கற்பனைப் பாத்திரங்களைப் படைத்து சுவாரஸ்யமான விறுவிறுப்பான புதினமாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர். வாசிக்கும் வாசகர்களை இந்த நந்திபுரத்து நாயகன் நிச்சயம் வசீகரப்படுத்துவான் என்பது திண்ணம்... நாயகனைக் காண பக்கங்களைப் புரட்டுங்கள்.
Be the first to rate this book.