பறையர்கள் என்பவர்கள் யார் என்னும் ஆதாரக் கேள்வியுடன் தொடங்கும் இந்த முக்கியமான ஆய்வுநூல் 19ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலான பறையர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்க்கை முறையை மிக விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் பதிவு செய்திருக்கிறது.
மிக முக்கியமான இந்த ஆய்வு நூல் ஆறு நீண்ட அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது.
1) 19ம் நூற்றாண்டில் தமிழகத்தில் பறையர்களும் வேளாள் அடிமைத்தனமும்
2) தென் இந்தியாவின் 'பறையர்' பிரச்சினையில் மிஷனரிகளின் செயல்பாடுகள்
3) 19, 20ம் நூற்றாண்டுகளில் தமிழ் பறையர்களின் வெளிநாட்டு முயற்சிகளும் உள்நாட்டு இடப்பெயர்ச்சிகளும்
4) அரசியல் அதிகாரத்தை நோக்கி பறையர்கள்
5) தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் அரசியல்
6) தமிழ்நாட்டில் அரசியல் அணிகளும் பிளவுபட்ட ஆதி திராவிடர் அரசியலும்.
தமிழக அரசியல் குறித்தும் சாதி அரசியல் குறித்தும் ஆர்வமும் அக்கறையும் கொண்டிருப்பவர்கள் அனைவருக்குமான நூல் இது.
Be the first to rate this book.