நம்மை நாமே காலத்திற்கு ஏற்றபடி செதுக்கிக் கொண்டு, வெற்றி வாகை சூடத் தேவைப்படும் பல்வேறு வெற்றிச் சூத்திரங்களை எளிய நடையில் விளக்குகிறது இந்தப் புத்தகம்.
பாஸ்டர், சிலர் தங்கள் முன்னேற்றத்தில் மிக உறுதியான எண்ணத்துடன் ஓர் ஆலமரம் போன்றிருப்பர். ஆனால் பிரச்னைப் புயல் வீசினால் வேரோடு சாய்வர். சிலர் நாணல் போல் எந்தப் பிரச்னைப் புயல் வீசினாலும் வளைந்து நெளிந்து கொடுத்துப் பின்னர் நிமிர்ந்து விடுவர் என்கிறார்.
தோற்று விட்டேனென்று நீ கருதுவாயானால் நிச்சயமாக நீ தோற்றவனே என்கிறார் ஆங்கில அறிஞர் ஒருவர். தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை காலால் நடப்பதற்குப் பதிலாகத் தலையால் நடப்பதைப் போன்றது என்கிறார் எமர்சன். எவன் எந்தப் பொருளில் நம்பிக்கை உடையவனோ அவன் அந்தப் பொருளாகத்தான் ஆகிறான் என்பது கீதை வாக்கு.
Be the first to rate this book.