கழுதைகள் என்றாலே தாழ்வானவை என்று அருஞ்சொற்பொருள் சொல்லும் அளவுக்கு அதன் மீதான படிமங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், குழந்தைகளுக்கு எளிய முறையில் கழுதைகளை அறிமுகப்படுத்தும் விதத்தில் 'நம்ம கழுதை நல்ல கழுதை' எனும் புத்தகத்தை எழுதியுள்ளார் கோவை சதாசிவம்.
கழுதைகள் குறித்து நாம் இதுவரை கொண்டிருக்கும் தவறான எண்ணங்களை மாற்றும் தகவல்கள் நிறைய உள்ளன. கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்துவைப்பதன் பின்னுள்ள மூடநம்பிக்கை, 'அழுத புள்ள சிரிக்குது கழுதைப் பால குடிக்குது' எனும் சொலவடைக்குப் பின்னுள்ள அறிவியல் தகவல், 'அக்ரஹாரத்தில் கழுதை' திரைப்படம் தந்த கலாச்சாரத் தாக்கம், காட்டுக் கழுதைக்கும் கோவேறு கழுதைக்குமான வேறுபாடு என இதில் உள்ள செய்திகளை எல்லாம் படித்து முடிக்கையில் கழுதை என்று சொன்னால், உங்களுக்குக் கற்பூரத்தின் ஞாபகம் வராது.
- நவீன்
Be the first to rate this book.