நமது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமானால், அல்லாஹ் நமது பாவங்களை மன்னிப்பான் என்ற முழு நம்பிக்கை முதலில் வரவேண்டும். நம்பிக்கை இல்லாமல் செய்யப்படும் எந்த செயலும் நிச்சயம் பலனற்றதாகும்.
நம்பிக்கை தான் நமது வாழ்க்கை; நம்பிக்கை தான் நம்மை உயர்த்தும்; நம்பிக்கை தான் நம்மை வளமாய், நலமாய் வாழவைக்கும்; அதே நம்பிக்கை தான் நமது பாவங்களையும் நிச்சயம் அழிக்கும் என்பது நோன்பு நமக்கு சொல்லும் செய்தி.
அடுத்து, ‘நன்மையை நாம் எதிர்பார்க்க வேண்டும்’. இவ்வாறு நாம் எதிர்பார்த்து இருப்பதை அல்லாஹ் விரும்பு கிறான். புனிதமிகு ரமலானில் மனிதனின் பாவங்கள் அல்லாஹ்வால் முற்றிலும் மன்னிக்கப்படுகிறது என்றால், நாம் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கவேண்டும். அதைத்தான் இந்த ரமலான் நமக்கு கற்றுத்தருகிறது..
Be the first to rate this book.