கடவுளை நீங்கள் உணரத்தான் முடியும். அனுபவிக்கத்தான் முடியும். நம்ப முடியாது. நம்பவும் கூடாது.’
‘பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரியாகத் தன்னையே பிரகடனப்படுத்திக்கொண்டவர் ஸ்டாலின். தன் கீழிருந்த மானுட சமுதாயத்தை மட்டுமல்லாது, தனது ஆட்சிப்பரப்பில் இருந்த இயற்கையையும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தலைப்பட்டார். மனிதர்களைக் கட்டுப்படுத்த முயன்றதால் ஏற்பட்ட பஞ்சத்தை, இயற்கையைக் கட்டுப்படுத்தித் தீர்க்க முயன்றார் ஸ்டாலின்.’
‘ராஜ ராஜ சோழனோ, ராஜேந்திர சோழனோ ஒரு நாட்டின்மீது படையெடுத்தால் அங்குள்ள மக்களைக் கொன்று, தேவாலயங்களை - புத்த விகாரங்களை உடைத்த-தாகத் தங்கள் மெய் கீர்த்திகளில் தங்களைப் புகழ்ந்துகொண்டது கிடையாது. தப்பித்தவறி அவர்களுடைய வீரர்கள் இம்மாதிரிச் செயல்களில் ஈடுபட்டால் அது அரசனுக்கு இழுக்காகக் கருதப்பட்டதே ஒழிய, பெருமையாக அல்ல. இதற்கு நேர் மாறானது கஜினி முகமது நடத்திய தாக்குதல்கள்.
Be the first to rate this book.