ஓவியர்கள் எழுத்துலகுக்கு வருவது புதிதல்ல. அவர்களில் மக்கட்பிரச்சினைகளைப் பேசும் நபர்கள் தான் மிகக் குறைவு. பாலாவின் கட்டுரைகள் சமூக ஊடகத்தில் பதிவு செய்யப்பட்டுக் கவனிக்கப்பட்டவை. சமகாலத்தில், அன்றாடங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கிச் செல்லும் சாமான்யர்களின் வரிசையிலிருந்து சற்று விலகியிருப்பவனது குரல். அது சமரசமற்றதாகவும், எதிர்வினை புரிவதாகவும் இருக்கிறது. மேலும் எளிய மனிதர்களின் சாயலோடு அன்பை பரஸ்பரம் பரிமாறிக் கொள்கிறது.
Be the first to rate this book.