ஒரு ஆண் எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறான்?ஒரு பெண் எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறாள்?ஒரு ஆண் எப்படி வளர்க்கப்படுகிறான்?ஒரு பெண் எப்படி வளர்க்கப்படுகிறாள்?மதம் ஆணை எப்படிப் பார்க்கிறது?மதம் பெண்ணை எப்படிப் பார்க்கிறது?நமக்கான குடும்பத்தில் ஒரு ஆண் என்ன செய்ய வேண்டும்?ஒரு பெண் என்ன செய்ய வேண்டும்?என்கிற எளிமையான கேள்விகளை முன் வைத்து அவற்றுக்கு விடை தேடும் முயற்சியில் நம் குடும்ப வாழ்வின் அடிப்படைகளை அசைக்கிற நடவடிக்கைகளை நோக்கி வாசகரை நெட்டித்தள்ளுகிறது இப்புத்தகம்.ஒரு கேள்விக்கான பதிலின் முடிவில் அடுத்த கேள்வி பிறக்கிற பாணியில் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.பெண் பிறப்பதில்லை.உருவாக்கப்படுகிறாள் அல்லது கட்டமைக்கப் படுகிறாள்.அக்கட்டமைக்கும் போக்கில் மதங்கள் ஆற்றும் பங்கு ‘மகத்தானது’.பெண¢அவளது சகல பரிமாணங்களையும் இழந்து ஒரு உடம்பாக மட்டுமே தன்னை உணரும்படியாக ஆக்கப்படுகிறாள்.தாய்மை,பெண்மை போன்ற போலி அடையாளங்கள் அவள் மீது திணிக்கப்படுகின்றன.அறிவியலுக்குப் புறம்பாக சில குணாதிசயங்களும் கூட மென்மையானவள்-அச்சம் மடம் நாணம் மிக்கவள்-அவள் மீது ஏற்றப்படுகின்றன.இப்படிப் பல்லாயிரம் ஆண்டுகாலமாக அவள் மீது படிந்து கிடக்கும் புழுதியை ஊதித்தள்ளுகிறது இப்புத்தகம்.பாய்ச்சல் வேகத்தில் காலங்களைக் கடந்து நேரடியாக இன்றைய வாசகரை நோக்கி விரல் நீட்டிக் கேள்விகளை முன் வைக்கிறது.படித்து ரசிப்பதற்காக அல்ல.செயல்பாட்டுக்கான உந்துதலை வாசக நெஞ்சில் எற்படுத்தும் புத்தகம்.
Be the first to rate this book.