இந்த நாவல் அரபு மொழியில் 'அவ்லாது ஹாரதினா' என்று அழைக்கப்பட்டு முதலில் 1959ஆம் ஆண்டு புகழ்பெற்ற அல்-அஹ்ராம் செய்தித்தாளில் தொடர் வடிவமாக வெளியிடப்பட்டது. 20ஆம் நூற்றாண்டில் அரபி இலக்கியத்தில் இந்த நாவலைப் போல வேறு எந்த நாவலும் பெரிய சர்ச்சையை உருவாக்கவில்லை. புத்தக வடிவிலான அதன் வெளியீடு எகிப்தில் தடை செய்யப்பட்டது.
இது 1967ஆம் ஆண்டில் லெபனானில் முதன் முதலில் அச்சிடப்பட்டது. பிலிப் ஸ்டீவார்ட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1981ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது முதல் இது உலகமெங்கும் பிரபல்யமானது.
இந்த நாவலும் மஹ்பூஸின் முத்தொகுப்பு நாவலும் கருத்தில் கொள்ளப்பட்டு அவருக்கு 1988ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
Be the first to rate this book.