பழைய கெய்ரோவின் ‘கற்பனையான’ குடியிருப்பு ஒன்றின் கதையைச் சொல்வதன் வழியாக நஜீப் மஹ்ஃபூஸ், இந்நாவலில் மனிதகுலத்தின் ஆன்மிக வரலாற்றுப் பரிணாமத்தைச் சித்தரித்துக் காட்டியிருக்கிறார்.
ஆபிரஹாமிய வேதங்களில் வரும் தீர்க்கதரிசிகள் தம் காலத்துத் தீமைகளை எதிர்த்துப் போராடிய வரலாறுகளை நினைவுபடுத்துவதாலேயே இது சர்ச்சைக்குரிய நாவலாகிப்போனது. சமகாலக் கெய்ரோவின் சமூக அமைப்பை விமர்சிப்பதற்கு மஹ்ஃபூஸ் இக்கதையை ஒரு விமர்சனக் கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்றே நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
5 Commonfolks பதிப்பகம்
பதிப்பகமாக மாறியிருக்கும் Commonfolksக்கு வாழ்த்துக்கள்..
Mubeen Akkif 13-10-2021 08:30 pm
5 விளக்கம்
அறபி மொழியில் வல்லினமாக ஒலிக்கப்படும் அந்த நடு எழுத்தைத் தமிழிலும் வல்லினமாக ஒலிப்பதே சரியானது என்பது எங்கள் நிலைப்பாடு. எனவேதான், அரபு என்று எழுதாமல் அறபு என்று முழுத் தன்னுணர்வுடன் பயன்படுத்தியிருக்கிறோம். உங்கள் அபிப்பிராயத்தை மதிக்கிறோம், நன்றி.
Abdul Latheef 14-08-2021 01:58 pm
5 அறபி இலக்கியத்திற்கு
Pls Note...அரபி இலக்கியத்திற்கு
Kannan js 14-08-2021 09:52 am