உலகம் போற்றும் உத்தம நபி(ஸல்), அல்லாஹ்வின் இறுதித்தூதர் அவர்கள் கண்ணீர் சிந்தியிருக்கின்றார்களா..? நம் அன்புத் தலைவர் தேம்பி அழுதிருக்கின்றார்களா...? காருண்ய ஒளி வீசிய அந்தக் கண்கள் ஏன் கலங்கின? அவர்கள் அழுத காரணங்கள் என்ன? வரலாற்றின் ஒளியில் கண்ணீர்த் துளிகளை இங்கு காவியமாக்கியிருக்கின்றார் மெளலவி நூஹ் மஹ்ழரி அவர்கள்.
நபி(ஸல்) அவர்களின் கண்ணீர்த் துளிகள் இயலாமையினால், இல்லாமையினால் சிந்தியதல்ல. வலிகளால், வேதனைகளால் வழிந்தோடவில்லை. ஆனந்தத்தினால் சிந்திய துளிகளல்ல, பிரிவால், பயத்தால் உதிர்ந்த கண்ணீர் முத்துக்களல்ல. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்வில் அழுத பொழுதுகள் மிக முக்கியமனவை. நம் அன்புத்தலைவர் தமக்காகக் கலங்கியதில்லை. நமக்காகக் கலங்கிய அந்தத் தலைவரின் கண்ணீரின் ஒவ்வொரு துளியும் ஒரு வரலாறு.
இறை அச்சத்தினால் இறைத்தூதர் அழுதிருக்கின்றார்கள். உம்மத்தை நினைத்துக் கலங்கிய தருணங்கள் அதிகமானவை. எவர் முன்னும் தலை தாழ்த்திடாத தன்மானமிக்க மாபெரும் தலைவர் இறைதிருமுன் சிரம் தாழ்த்தி அழுத வேளைகள் மனித குலத்தின் பாடங்கள்.
ஆயிரமாயிரம் போர்ப்படைகளையும், முரட்டு இராணுவங்களையும் கண்டு துளியும் அஞ்சாமல் நெஞ்சுயர்த்தி நின்ற வீரத் தலைவர் இறையச்சத்தினால் கசிந்துருகிய கணங்கள் காவியங்கள். அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்வியலை புதிய கோணத்தில் எடுத்தியம்புகிறது இந்த நூல்.
Be the first to rate this book.