-மனித உறவுகள் மீது சமூகத்தின் விதிகள் எவ்வாறு ஆக்கிரமிக்கின்றன
என்பதை ‘நள்ளிரவும் பகல் வெளிச்சமும்' நாவல் திறம்படச் சித்திரிக்கிறது.
கோபியும் பாத்துமாவும் காதலித்து உறவில் கலக்கிறார்கள். ஆனால் மதத்தின்
பெயரால் அந்த உறவு வெட்டி எறியப்படுகிறது. பாத்திமா "வழி தவறிய
பெண்"ணாகிறாள். அந்த உறவின் கனியான மொய்தீன் ‘காஃபிர் 'என்று
தூற்றப்படுகிறான். இருவரும் கோபிக்காகக் காத்திருக்கிறார்கள். இருபது
ஆண்டுகள் நீண்ட அந்தக் காத்திருப்பு என்னவாக நிறைவடைகிறது என்பதே
நாவலின் கதையாடல். ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய இந்தப்
படைப்பு இன்றும் காலத்துடனும் சூழலுடனும் பொருந்தும் நிரந்தப்
புதுமையைக் கொண்டிருக்கிறது.
Be the first to rate this book.