இமயமலை பயணத்தினூடே அராத்துவின் நள்ளிரவின் நடனங்கள் படிக்க நேர்ந்தபோது மிரண்டு விட்டேன். ஒரு Charles Bukowski கதைக்கு நிகரான கதை இது. சமகாலத்திய தமிழ் இலக்கியத்தின் நிலையை எண்ணினால் சோர்வே மிஞ்சுகிறது. யாருக்கும் வாசகனைத் துன்புறுத்தாமல் கதை சொல்லத் தெரியவில்லை. சமகாலத் தமிழ் இலக்கியம் சராசரி மனிதர்களால் சூழப்பட்டிருக்கிறது. நான் வாசகர்களைச் சொல்லவில்லை. எழுத்தாளர்களைச் சொல்கிறேன். இந்த நிலையில் அராத்து எழுதிய இந்தச் சிறுகதை சர்வதேசத் தரம் வாய்ந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. இந்திய இளைய சமுதாயத்தினர் இன்று அனுபவிக்கும் angst இந்தச் சிறுகதையில் மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. அராத்துவுக்கு angst என்றால் என்ன என்று தெரியாது. தெரிய வேண்டியதில்லை.
- சாரு நிவேதிதா
Be the first to rate this book.