ஒரு கட்டத்தில் லத்தீன் அமெரிக்காவின் புதுமையான எழுத்துகள் புயல் போல நவீனத் தமிழிலக்கியச் சூழலில் நுழைந்தன. ஏற்கெனவே எழுதிக்கொண்டிருந்தவர்கள் திகைத்தார்கள். அப்போதைய இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு எவ்விதம் எழுதுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. எனக்கென்றே அந்தச் சூழல் ஏற்பட்டதோ என்ற ஆனந்தத்தில் நான் இருந்தேன். ஏனென்றால், எனக்கு உகந்த எழுத்துப் பாணியாக அவை இருந்தன. மையமற்ற கதை; புதுமையான உத்தி; மாறிய எழுத்துமுறை இவற்றை வெளிப்படுத்த தவித்துக்கொண்டிருந்த எனக்கு, ஏற்ற சூழல் அமைந்தது. இந்தச் சூழல் என்னும் முரட்டுக்குதிரையில், ஆனந்தமாகவும் லாகவமாகவும் நான் சவாரி செய்தேன் என்றே நினைக்கிறேன்.
- சுரேஷ்குமார இந்திரஜித்
Be the first to rate this book.