சங்க பரிவாரத்தின் மதவாதத் தாக்குதலினால் பாதிப்புக்குள்ளாகும் சிறுபான்மையினர், பொருளாதாரக் கொள்கைகளினால் துன்புறும் தொழிலாளிகள், விவசாயிகள், முறைசாராத் துறையிலிருக்கும் கோடிக்கணக்கான மக்கள், வேலைவாய்ப்பை உருவாக்காத வளர்ச்சியினால் எதிர்காலம் இருண்டிருக்கும் இளைஞர்கள், சுரங்கத் தொழிலில் பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் நிலத்தையும், வாழ்வாதாரங்களையும் இழந்து கொண்டிருக்கும் ஆதிவாசிகள், உயர்சாதிக் கண்ணோட்டத்தினால் பாதிக்கப்படும் பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும், பிற்போக்கு சிந்தனையால் அறிவியல்பூர்வமான கல்வியை இழக்கும் நிலையிலிருக்கும் மாணவர்கள் என பல மக்கள் பிரிவினரும் பெரும் அபாயத்தில் இருக்கின்றனர்.
இவர்களின் ஒன்றுபட்ட போராட்டம் உருவாகாமல் தடுப்பதற்காக மத, சாதி பிரிவினை சிந்தனைகளை மேலும் கூராக்கி சமுதாயத்தைக் கூறுபோடும் முயற்சிகள் இன்னும் அதிகமாகும். நேரடியான போராட்டங்களை நடத்தும் அதே நேரத்தில், மக்களின் சிந்தனையை வெல்லும் போராட்டமும் அவசியம். இந்தப் போராட்டத்தில் நாம் அறிந்தவற்றை அதிகப்படியான மக்களுக்கு எடுத்துச் சென்று அறிவையும், உணர்வையும் செழுமைப்படுத்தும் பணியில் நம் கையிலுள்ள ஊடகங்களும் எழுத்தாளர்களும் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
தோழர் ரியாஸ் எழுதியிருக்கும் இந்த அற்புதமான புத்தகம் அந்தப் போராட்டத்தில் முக்கியமான பங்கு வகிக்கும் என்று உறுதியாகவும், உற்சாகத்துடனும் கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
Be the first to rate this book.