‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற நம் முன்னோர் வாக்கு என்னென்றும் நம் வாழ்வில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. எத்தனை வயது ஆனாலும் மருந்தின்றி சரியான உணவு முறைகளை அன்றாடம் பின்பற்றினாலே உடல் பிணியின்றி நலமுடன் வாழலாம். உடல் சிறு சிறு உபாதைகளுக்குள்ளாவது இயற்கையே. குழந்தைகள், பெண்கள், ஆண்கள், அனைவருக்கும் பொதுவாக சில உபாதைகள் ஏற்படும்போது, அவற்றை நம் வீட்டில் உள்ள சில பொருள்களைக் கொண்டே குணமாக்கலாம் என்பது நாட்டு மருத்துவத்தின் அடிப்படை.
அப்படிப்பட்ட எளிய வகை நம் நாட்டு மருந்துகள் பற்றியும் நம் வீட்டிலேயே அந்த மருந்துகளை செய்துகொள்ளும் வழிமுறைகளையும் சொல்கிறது இந்த நூல். இன்றைய சுற்றுச்சூழல் மாசுபாட்டாலும் இன்னும் பல காரணங்களாலும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் புதுப்புது நோய்கள் வருகின்றன. ஆனால் அத்தனை நோய்களையும் தீர்க்கும் மகத்துவம் நாட்டு மருத்துவத்துக்கு உண்டு என்பதை அறிந்துகொள்ளலாம் இந்த நூலின் வழியாக! நாட்டு மருத்துவம் நமக்குத் தரும் ஆரோக்கியத்தை அறிந்துகொள்ள வாருங்கள்!
Be the first to rate this book.