உடல் நலத்தை உணவின் மூலமே பெற முடியும். நோய் வந்த பிறகு அதை எதிர் கொள்வதை விட அதை வர விடாமல் தடுப்பது உணவில் தான் உள்ளது. நோய்க்கு மருந்தைத் தேடுவதை விட உணவையே மருந்தாக்கிக் கொள்வது சிறந்தது.
உணவு முறையில் ஏற்பட்ட மாற்றங்களால்தான் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிகக் கொழுப்பு, இதய நோய்கள், மூட்டு நோய்கள், எலும்பு தேய்மா னம், ஜீரணக் கோளாறு போன்ற நோய்களால் அவதிப்படுகிறோம்.
உடலுக்கு பொருத்தமான உணவுகளை நாம் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டால் மருத்துவ மனைகளுக்கு செல்ல வேண்டியதில்லை. இந்த அடிப்படையில் பல அரிய மூலிகைகளையும் அதன் மருத்துவக் குணங்களையும் இந்த நூலில் டாக்டர் இரா.பத்மப்ரியா எடுத்துக் கூறுகிறார்.
அதோடு சிறுதானியங்கள், கீரைகள், காய்கறிகளில் சுவையான & ஆரோக்கியத்தைத் தரும் உணவு வகைகளைச் சமைப்பது எப்படி என்பதையும் சொல்லித் தருகிறார். ஒவ்வொரு இல்லங்களிலும் இருக்க வேண்டிய இன்றியமையாத நூல்களில் இதுவும் ஒன்று.
டாக்டா் இரா. பத்மப்ரியா
மரு. இரா. பத்மப்ரியா, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூாியில் மருத்துவம் பயின்றவா். 25 வருடகாலமாக மருத்துவ சேவை ஆற்றி வருகிறார். ஊடகங்களின் மூலமாக உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறாா்.
Be the first to rate this book.