நாகர்கோவில் தனித்துவமிக்க நிலம். பேதமற்ற மனிதர்கள் வாழும் இந்த நிலம், பிரிவினைகளின் கண்ணிவெடிகளுக்கிடையேயும் கவனமாகப் பயணித்து வருகிறது!
இங்கே இயற்கை விழிகளுக்கு வியப்பூட்டும். பாடும் பறவைகள் பரவசப்படுத்தும். ஓடும் நதிகளில் ஆடிக்களிக்கும் மக்கள் கூட்டம்.
வட்டார மொழியிலும், உணவுப் பழக்கத்திலும், கலாச்சார அடையாளங்களிலும், சிவப்புச் சித்தாந்தங்களிலும் இந்த நிலம் தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட பெரிதும் வேறுபட்டிருக்கிறது. மத நல்லணிணக்கத்தின் ஆழமான வேர்கள் இங்கே நங்கூரமிட்டிருக்கின்றன. ஆதிக்க சக்தியின் நசுக்குதல்களிலிருந்து போராடிக் கரையேறிய நிகழ்வு முதல், தமிழின் சிரசினில் இலக்கியக் கிரீடங்களைச் சூடியது வரை இந்த நிலம் தேசத்தின் விழிகளால் கவனிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது!
இந்த நூல், குமரி மாவட்டத்தின் மத, இலக்கிய, கலச்சார, வாழ்வியல் அடையாளங்களைப் பதிவு செய்திருக்கிறது. வாசித்து முடிக்கும்போது நாகர்கோவிலுக்கு ஒரு டிக்கெட் புக் பண்ண மனம் உங்களை நச்சரிக்கலாம், கவனம்!
Be the first to rate this book.