இந்தக் கதைகளை மயானத்தில் அரிக்கேன் விளக்கு பற்றவைத்து சம்மணமிட்டு அமர்ந்து பால்பாய்ண்ட் பேனாவில் மேப்லித்தோ தாளில் எழுதியதாக இதன் ஆசிரியன் தெரிவிக்கிறான். விளக்கு வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு வந்த வண்டொன்று ஆசிரியனது இடது காதில் நுழைந்து மூளைக்குள் சென்று கொஞ்சம் உறிஞ்சி விட்டு வெளியேற வழி தெரியாமல் மூக்கின் வழி வெளியேறியதாக மயான எரியூட்டி டக்லெஸ் டியாங்கெ தெரிவிக்கிறார். ஆசிரியன் கதைகளை எழுதிக் கொண்டிருந்த சமயம் வெளியீட்டு நிறுவனம் ஒன்று ஆசிரியனுக்கு மின்விளக்கும், படுக்கையும், இங்க் பாட்டிலும் தர முன்வந்த சமயம் ஆசிரியன் துக்கம் பீறிட இடத்தைக் காலி செய்கிறான் அல்லது அப்படி நடக்கிறது. நகரின் பிரதான கழிப்பிடக் கிடங்கொன்றில் பகல் வேளையில் மட்டும் அமர்ந்து எழுதியதாகவும் இதை வெளியிடும் பதிப்பகம் மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் புளுகத் துவங்கி விட்டது. பிறகு இதைப் பற்றி பேச ஏதுமில்லாமல் ஆசிரியன் வாசகர்களிடம் ஓடி தஞ்சம் புகுந்த சந்தர்ப்பம் அழகானது என்பதோடல்லாமல் துக்கமானதும் கூட!
Be the first to rate this book.