மா.அமரேசனின் நடுங்கும் நிலம் நடுங்கா மனம் என்னும் இத்தொகுப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும், உலகமய, தனியார்மய, எதிர்புணர்வுமிக்க சமூக அக்கறை மிக்க சிந்தனையாளர்களுக்கும். விளிம்புநிலை மக்களின்பால் கரிசனம் கொள்ளும் செயல்பாட்டாளர்களுக்கும் ஒரு ஆயுதமாகச் சுழல்கின்றது.
“நடுங்கும் நிலம் நடுங்கா மனம்” தலித் தளத்திலிருந்து எழும் மற்றுமொரு 'சமவாய்ப்பு பிரகடனம்' மட்டுமல்ல. வாழ்வுரிமை முழக்கம், மக்கள் பங்கேற்புச் சாசனம். நிகழப்போகும் பேரழிவைத் தவிர்க்கும்படி அதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ளும்படி (திருவண்ணா)மலை மேலிருந்து ஒலிக்கும் முன்னெச்சரிக்கைக் குரல். நாலாதிசைகளிலும் இந்தக் குரல் மோதி மோதி சுரனையற்றுக் கும்பக்கர்ண உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் சமூகத்தை தட்டியெழுப்பிச் செயல்பட வைக்கும் கூறுகள் இப்படைப்பில் உண்டு.
சமூகத்தின் செயல்பாடுகள், சூழலியல் தன்மைகள் மற்றும் அதன் பாதிப்புகளை விளிம்பு நிலை மனிதனின் தெளிந்த பார்வையில், துணிவு மிக்க வார்த்தைகளோடு பதிவு செய்துள்ளார் நூல் ஆசிரியர்.
சண்முகானந்தம்
Be the first to rate this book.