தமிழில் நாடக நிகழ்வுகள் குறித்து புதிய நாடக செயல்பாட்டாளர்களிடம் ஆர்வங்கள் பெருகிவரும் நிலையில் இந்த நாடகப் பிரதிகள் புத்தகமாக வெளிவருவது அவற்றின் நிகழ்த்துதல் குறித்த சாத்தியங்களை அதிகரிக்க உதவும்.
வெவ்வேறு காலகட்டங்களின் சமூக அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் மனித உறவு நிலைகள் குறித்த சமகால நுண்ணுணர்வுடன் எழுதப்பட்டுள்ள இந்த நாடகங்கள், பல்வேறு கருத்தோட்டங்களின் பிரதிபலிப்புகளாக வடிவம் கொண்டுள்ளன.
இன்றைய உலகமயமாக்கல் சூழலில் மதிப்பீடுகள் சரிவு, உறவுநிலைகள் சிதைவு, தனிமை, அடையாளம் இழப்பு ஆகிய கடுமையான நெருக்கடிகளால் சூழப்பட்டுள்ள நாம் நாடகம் போன்ற நிகழ்கலைகள் உருவாக்கும் மனித ஸ்பரிசம் மற்றும் கூட்டுணர்வு ஆகிய தேவைகளை அதிகமாக நாடவேண்டியுள்ளது.
இத்தொகுப்பில் உள்ள நாடகங்கள் அசாதாரண சூழல்களில் சிக்கியுள்ள மனித நிலைகளின் போராட்டங்களை, அதிர்வுகளை, தீர்வுகளற்ற தன்மைகளை தமக்குரிய பிரத்யேகமான நிகழ்தளத்தில் பல்வேறு அனுமானங்களுடன் முன்வைக்கின்றன. நாடகப் பிரதியாக்கம் மற்றும் நிகழ்வு குறித்த நம் கவனங்கள் தீவிரப்பட இத்தொகுப்பு உதவ முடியும்.
தாஸ்தாவ்ஸ்கி, ஸ்லாவோமிர் மிரோஜெக், ஆலிவர் ஹெய்லி, கார்ல் லாஸ்லோ, மேரியோ ஃப்ரெட்டி, ஜார்ஜ் பெரேக், ஜி.சங்கர பிள்ளை, நந்தகிஷோர் ஆச்சார்யா, மோகன் ராகேஷ் ஆகியோரின் நாடகங்களை தமிழில் வெளி ரங்கராஜன், திலீப்குமார், மு.குருவம்மாள், சரஸ்வதி ராம்நாத், எஸ்.ராமகிருஷ்ணன், ரமேஷ் பிரேதன், புவியரசு, என்.ஜம்புநாதன் ஆகியோர் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். இவை 'வெளி' நாடக இதழில் பிரசுரமானவை..
Be the first to rate this book.