‘உலகமே ஒரு நாடக மேடை; நாமெல்லாம் அதன் நடிகர்கள்’ என்று ஷேக்ஸ்பியர் சொன்னாலும் சொன்னார், நாம் ஒவ்வொரு கணமும் அந்த இலக்கிய மேதையின் கூற்றை மெய்ப்பித்துக்கொண்டே இருக்கிறோம். வாழ்க்கையே ஒரு நாடகமாகத்தான் இருக்கிறது; அதிலும் குறிப்பாக அபத்த நாடகமாக (Absurd Play) இருக்கிறது வாழ்க்கை.
உலகப்பெரும் நடிப்புக் கோட்பாட்டாளர்களான ஸ்தானிஸ்லாவ்ஸ்கி, குரோட்டோவ்ஸ்கி, மேயர் ஹோல்ட் போன்ற ஆய்வு நோக்கிலான கருத்துக்களை முன்வைத்தவரில்லை தி.க.சண்முகம். தனது பல்லாண்டு கால நடிப்பு அனுபவங்களினூடாக நடிப்புக் குறித்த கருத்துக்களை அவர் தொகுத்துக் கொண்டிருந்தார். அந்த அனுபவத்தையே இச்சிறு நூலில் பகிர்ந்துள்ளார்.
நடிப்பைக் கற்றுக்கொள்ள விழைவோர், நடிப்பைக் கூர்மைப்படுத்திக் கொள்ள விழைவோர் யாவருக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக இச்சிறுநூல் அமையும் என்பது உறுதி.
-கி.பார்த்திபராஜா, பேராசிரியர் / நாடகவியலாளர்
Be the first to rate this book.