திருமறையும் திருநபியின் வாக்கும் இஸ்லாம் மார்க்கத்தின் இரண்டு கண்கள். ஹதீஸ் என்று சொல்லப்படும் நபிமொழித் தொகுப்புகள் பல உள்ளன. அவற்றில் ஆதாரப்பூர்வமானவை என ஆறு அறியப்படுகின்றன. ஆனாலும் ஒன்றைக்கூட முழுமையாகப் படித்த முஸ்லிம்கள் வெகுசிலரே என்பது மறுக்க முடியாத உண்மை. அத்தொகுப்புகளையெல்லாம் படித்துவிட்டால் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும் சொந்தமான மார்க்கமல்ல இஸ்லாம் என்பதும், மனிதகுலம் முழுமைக்குமான தூதராக முஹம்மது (ஸல்) வந்துள்ளார்கள் என்பதும் விளங்கும். நல்ல கவிஞர்களையும், நல்ல கவிதைகளையும் பரிசுகள் கொடுத்து ஊக்குவித்த நபிகளாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமொழிகளை மனதில் நிற்கும் வகையில் முதன்முறையாக புதுக்கவிதைகளாக நாகூர் ரூமி கொடுத்துள்ளார். இஸ்லாத்துக்கும் இலக்கியத்துக்குமான சேவையாக இது நிற்கும்.
Be the first to rate this book.