என்னை படிக்காதே என் புத்தகத்தை படி என்றான் தமிழகத்தின் தலைசிறந்த கவிஞன் ஒருவன். என்னால் உயர்ந்த கருத்துக்களைச் சொல்ல முடியும் , ஆனால் என்னால் அதுபோல் வாழ முடியாது என்று அந்த கவிஞன் சொல்கிறான் போலும். எங்களை முன்மாதிரியாக கொள்ளுங்கள் என்று சொல்லும் துணிவும், தன்னம்பிக்கையும் இறைத்தூதர்களுக்கு இருந்தன. அவர்களின் வாழ்வும் வாக்கும் எப்போதும் முரண்பட்டதில்லை. இறைதூதர்கள் வரிசையில் முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாறு மட்டுமே முழுமையாக ஆதாரத்தோடு நமக்கு கிட்டியுள்ளது. பொதுவாக சமயத் தலைவர்கள் வழிபாட்டிற்குரியவர்களாக ஆக்கப்பட்டு மக்களால் நினைவு கூரப்படுவர். ஆனால் சிலையின்றி படமின்றி முஹம்மது (ஸல்) அவர்கள் உங்களில் வாழ்கிறார். அவரிடத்திலிருந்து பெற வேண்டிய தலைமைத்துவப் பண்புகளை இந்த நூல் விளக்குகிறது.
Be the first to rate this book.