மனித வாழ்வியலின் ஏனைய பல்வேறு துறைகளுக்கான வழிகாட்டல்களைக் குர்ஆனும் நபிமொழியும் தன்னகத்தே கொண்டுள்ளன. அவற்றையும் தொட்டுப் பார்க்கும் ஒரு முயற்சியாக ஹதீஸ் விளக்கத் தொடரை அமைத்துக்கொண்டால் என்ன எனும் எண்ணம் நூலாசிரியரின் உள்ளத்தில் உதித்ததால், அந்த எண்ணத்தைச் செயல்படுத்தும் முயற்சியில் அவர் தேர்வு செய்த சில நபிமொழிகளின் அழகிய விளக்கமே இந்த நூல்.
அல்லாஹ்வின் வேதத்தையும் அண்ணலார்(ஸல்) அவர்-களின் பொன்மொழிகளையும் மனிதர்களின் சொற்களால் விளக்கிவிடலாம் என்பது அவ்வளவு எளிதான செயலன்று. ஆயினும் அவற்றில் பொதிந்து கிடக்கும் அரும்பெரும் பொக்கிஷங்களில் ஒரு சிறுபகுதியையாவது சிந்தனைக்கு எட்டச் செய்யலாம் என்பதே இந்த நூலாக்க முயற்சிக்கான அடிப்படையாகும்.
இஸ்லாமிய வகுப்புகள், தனிப்பட்ட வாசிப்பு, அன்பளிப்பு, வெள்ளிக் கிழமை உரைகள், இதர சொற்பொழிவுகள் ஆகிய அனைத்துக்கும் இந்த நூல் ஒரு குறிப்பு நூலாகப் பயன்படும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.
Be the first to rate this book.