இஸ்லாமிய வரலாற்றில் பத்ர் போர் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். அந்த வெற்றியின் விளைவு போர் கைதிகள் இஸ்லாமியர்களுக்கு கிடைத்ததே. அச்சமயத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நினைவில் வந்தவர் இஸ்லாத்தை ஏற்காத ஒருவர் என்றால் ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றாகும். அத்தோழர் அச்சமயத்தில் உயிருடன் இருந்து அக்கைதிகளை விடுதலை செய்யும்படி பரிந்துரைத்திருந்தால் அனைவரையும் விடுதலை செய்திருப்பேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதுதான் வியப்புக்குரியது. இதற்கு காரணமானவர், இந்த அளவு பெருமானார் (ஸல்) அவர்களின் மனதில் இடம் பிடித்தவர் யார் என்று பார்க்கும்பொழுது முத்இம் இப்னு அதி என்பவர் தான் அவர்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை நமக்கு என்றைக்குமே வழிகாட்டுபவையாக அமைந்திருக்கிறது. இஸ்லாத்துக்கு சாதகமாக மக்கள் கருத்தை உருவாக்க வேண்டுமா? அதற்கான வழிமுறைகள் நமக்கு கிடைக்கும். நம் மக்கள் என்று அனைவரையும் சொந்தம் கொண்டாட வேண்டுமா? வழிகள் கிடைக்கும்.
செல்வாக்குமிக்க ஆளுமைகள் மீது கவனம் செலுத்த வேண்டுமா? பெருமானாரின் வாழ்விலிருந்து செயல்முறை விளக்கங்கள் கிடைக்கும்.
நம்மைச் சுற்றி முத்இம் இப்னு அதி போன்ற பலர் இருக்கிறார்கள். அவர்களை நாம் மறந்து விடாமல் நம்மோடு இணைத்து இஸ்லாத்துக்கு சாதகமான மக்கள் கருத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு இந்நூல் சிறப்பான முறையில் உதவும் என்று நம்புகிறோம்.
Be the first to rate this book.