புரோகிதச் சமுதாயமாகவும் வணிகச் சமுதாயமாகவும் வாழ்ந்தவர்களைப் போராளிகளின் சமுதாயமாக மாற்றி ஆட்சியாளர்களாய் உயர வைத்த அண்ணலாரின் வரலாறு சுருக்கமாகவும் அதே சமயம் ஆதாரபூர்வமாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இருட்டறையில் இருந்த மனிதர்களை இருபத்து மூன்றாண்டுகளில் அண்ணலார் வெளிச்சத்துக்குக் கொண்டு-வந்தார். அதன்பின் கிழக்கிலிருந்து மேற்கு வரை அண்ணலாரின் அருமைத்தோழர்களால் அந்த வெளிச்சம் ஏந்திச் செல்லப்பட்டது.
அதன்பின் சிலகால கட்டங்களில் தொய்வுகள்; மீண்டும் எழுச்சிகள்! மொகலாயர்கள் நம்நாட்டை ஆண்டாலும் இஸ்லாத்தில் வீழ்ச்சிகள்! வீழ்ச்சிக்குப்பின் எழுச்சி. எழுச்சிக்குப்பின் வீழ்ச்சியென ஓடிய கால ஓட்டத்தில் இப்போது மீண்டும் ஓர் உயர் எழுச்சி, இந்த எழுச்சிப் பயணத்திற்கு உதவியாக நாம் ‘இவர்தான் முஹம்மது (ஸல்)’ எனக் கூறி அண்ணலாரின் முன்மாதிரி வாழ்வை எடுத்துரைக்க வேண்டும்.
அதற்கு இந்நூல் கட்டாயம் பயன்படும்; பயன்படுத்த வேண்டியவர்கள் நாம்தாம்!
Be the first to rate this book.