'அல்குர்ஆன்' இறைவனின் வழிகாட்டுதல்தான் - வேதம் - என்பதற்கும், அதுவே இறுதி வேதம் என்பதற்கும் என்ன ஆதாரம்?
'இறைவன் ஒருவனே' என்ற மூலக் கொள்கையை - ஓரிறைக் கொள்கையை - உணர்த்துவதே அல்குர்ஆனின் பிரதான இலக்கு. எனில், அந்த அல்குர்ஆன் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்தான் என்பதற்கு உறுதியான சான்று வேண்டாமா?
முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வு ஒன்றே இதனை மெய்ப்பிக்கும் ஒரே ஆதாரமாகும்.
இஸ்லாத்தின் செய்தியான, 'லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' (இறைவன் ஒருவனே, அவனின் தூதர் முஹம்மது ஆவார்) எனும் சித்தாந்தத்தின் முக்கிய ஆதாரம் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வே!
அந்த வாழ்வினூடாகவே அல்குர்ஆன் இறைவனின் வேத வழிகாட்டுதல் என்பதையும், இறைவன் ஒருவனே என்பதையும் அறிந்து கொள்கிறோம்.
இன்னும் அழுத்திச் சொல்ல வேண்டும் என்றால், இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வை அறிவதன் மூலமே, முஸ்லிம் தன்னை முஸ்லிமாக உணரத் தொடங்க முடியும்.
'லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' (இறைவன் ஒருவனே, அவனின் தூதர் முஹம்மது ஆவார்) என்ற வாசகத்தை மொழிந்து முஸ்லிமானவுடன், தொழுகை உள்ளிட்ட வழிபாடு சார்ந்த அம்சங்கள் சட்டப்பூர்வ கடமையாவது போல, இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வைக் கற்பது அறிவுத்தளத்தில் மானசிக கடமையாகி விடுகிறது.
தமிழ்மாமணி அதிரை அஹ்மத் அவர்கள், பதினைந்து ஆண்டு கால உழைப்பில், மிகத் துல்லியமான ஆதாரங்களின் துணை கொண்டு, 'நபி (ஸல்) வரலாறு' நூலை மிக விரிவாக எழுதியிருக்கிறார்.
நவீன யுகத்தில் சமூக, அரசியல், பொருளாதார துறைகளில் தேவையான தீர்வை, இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து தருவித்துக் கொள்ளும் சிந்தனைப் புரட்சியை அதிரை அஹ்மத் அவர்களின் எழுத்துக்கள் கொடுக்கும்.
- குதுபுத்தீன்
Be the first to rate this book.