இல்லை, அசடே, உன்னுடைய மேல் தூக்கிய மூக்கு எனக்கு எல்லாக் கதையையும் சொல்லிவிட்டது. “வழிப்போக்கர் போரியாவின் தோளில் கையை வைத்தார். “நீ என்ன நினைக்கிறாய் தெரியுமா? கண்ணுக்குப் புலப்படாமலிருக்க வேண்டும் என்று.” இப்படிச் சொல்லிவிட்டு அவர் கென்னாதியின் பக்கத்தில் போய் நின்று கொண்டார். “நீ எண்ணுகிறாய்: சிங்கத்தின் பலமும் மானின் வேகமும் தரக்கூடிய மருந்துத் துளிகளைக் கண்டுபிடிக்கமுடியாதா என்று. இந்தப் பிரச்சினைகள் எல்லாம் அர்த்தமற்றவை. மனிதன் சந்திரனுக்கு எப்படிப் பறந்து செல்வான் பீரங்கியிலிருந்தா அல்லது ராக்கெட்டிலா என்பதை ஊகித்துப் பாருங்கள் நீங்கள்….
Be the first to rate this book.