அவர்கள் இருட்டும் முன்பு, காட்டைக் கடந்தாக வேண்டும். சதுப்பு நிலம் போன்று தரை, கால் உள்வாங்கியது. ஆபத்தான வெளி, சருகுகள் குப்பைகள் மூடி, மண்ணில் முகம் மறைந்து கிடந்தது. அங்கிருந்த மரத்தின் பருத்த கிளையை ஒடித்து எடுத்தான் பெரியவன். அந்தக் கொம்பால் தரையை ஊன்றித் தடம் பார்த்து முன்னே நடந்தான். பெரியவன் வைத்த காலடிக்கு மேல் தன் அடியை வைத்து ஜாக்கிரதையாக நடந்து சென்றான் சின்னவன்.
அடுத்த ரெண்டு கல்லும் முல்லைக்காடுதான். கார்கோடன், அதன் சந்ததியர் படுத்துக்கிடக்கும். ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கும். என்னத்துக்கு ஓய்வு என்றால் சண்டை போட்ட களைப்புதான். பல காலங்களுக்கு முன்னால் கிருஷ்ணனும் அர்ஜுன-னும் அவர்கள் பந்துமித்திரர்களோடு கார்கோடன் வம்சத் தாரோடு சண்டைக்கு வந்தார்கள். காண்டவ வனம் உள்ளிட்ட பூமியின் பரவலில் சொந்தம் கொண்டாடுவது கிருஷ்ணன், அர்ஜுனரின் நோக்கமாக இருந்தது. கார்கோடன், மலையின் உச்சியில் ஏறி நின்றுகொண்டு சொன்னான். இந்த மலை போல் லட்சம் கோடி மலைகள் தேய்ந்து தேய்ந்து மண் ஆன கல்ப கோடி வருஷங¢களாக நாங்கள்தான் இங்கே குடி இருக்கிறோம். அதனால் இது எங்கள் பூமி என்றான். யாரும் அவன் பேச்சைப் பொருட்படுத்துவதாக இல்லை. சண்டை பல ஊழிகள் தொடர்ந்தது. இன்னும்தான்...
- நூலிலிருந்து
Be the first to rate this book.