நாட்டுப்புறக் கதைகளைச் சேகரிப்பதற்கும் சிறுவர்களுக்கான நாட்டுப்புறக் கதைகளைச் சேகரிப்பதற்கும் நிரம்ப வேறுபாடு உள்ளது. சிறுவர்களின் உளவியல், அவர்களின் மொழி நடை,போன்ற அம்சங்களை மனதில் கொண்டு இக்கதைகளை உளிய நடையில் எழுதி பதிவு செய்துள்ளேன். நேரடியாகவும் மறைமுகமாகவும் தாணவர்களுக்கும் சிறுவர்களுக்கும் நீதிகளைக்கூறும் இந்நாட்டுப் புறக்கதைகள், பெரியவர்களும் படித்து இன்புறும் வகையில் அமைந்துள்ளன. இராஜ பாளையம் அருகில் உள்ள கொங்கள் குளம் என்ற கிராமத்தில் அமைந்த குன்னாங்குன்னாங்குர் என்று சிறுவர்களுக்கான அமைப்பிலும், திருநெல்வேலி பாளையங் கோட்டையில் உள்ள மரப்பாச்சி என்ற அமைப்பிலும் குழந்தைகளுக்கான நாட்டுப்புறக் கதைகளை ஒரு கதைசொல்லியாக இருந்து நான் கூறியது. எனக்குப்புதிய அனுபவமாக அமைந்தது. அந்த அனுபவம், இக்கதைகளைத் தொகுக்க உதவியது.
Be the first to rate this book.