நாட்டுப்புறக் கலைகளில் கைவினைப் பொருட்கள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள். ஆடல்கள், தெய்வங்கள், திருவிழாக்கள், விளையாட்டுகள். போன்ற பல கூறுகள் அடங்கும். பேராசிரியர் நா.வானமாமலை அவர்கள் 1960-ஆம் ஆண்டிலிருந்து நாட்டுப்புறவியல் ஆய்வுத் துறைக்கு நிலையான ஊக்கம் அளித்தவராவார்.
நாட்டுப்புறக் கலைகளைத் தனித்துறையாக எடுத்து ஆய்வு செய்தவர்களில் டாக்டர் மு. இராமசாமி (தமிழகத்தோற்பாவை நிழல் கூத்து, (1978) டாக்டர் அ. அறிவுத்தம்பி (தமிழகத்தில் தெருக்கூத்து. (1981) ஆகிய இருவருக்குப் பிறகு பேரா. கரு.அழ. குணசேகரன் இந்த ஆய்வேட்டின் மூலம் குறிப்பிடத் தகுந்தவராவார்.
கும்மி. ஒயில்கும்மி. மாரடிப்பு இம்மூன்றும் கைதட்டும். முறையிலும், காலடி வைத்தல் நிலையிலும் ஆட்ட அசைவுச் சூழலிலும் தொடர்புடையனவாதலால் இவற்றைப் பற்றிய திறனாய்வும். ஒப்பீட்டாய்வும் அவசியமாகின்றன. இத்தேவையை இவ்வாய்வுநூல் நிறைவு செய்கின்றது.
Be the first to rate this book.