தமிழர்தம் பண்டைய கலைகள் அனைத்திற்கும் கூத்துக்களும் ஆடல்களுமே அடியூற்றாகத் திகழ்ந்தன. இக் கூத்துக்களும் ஆடல்களும் காலப் போக்கில் நாட்டுப்புற நிகழ்த்துக் கலைகள் என இனம் காணப்பட்டுப் போற்றப்படுகின்றன.
இவை சங்க இலக்கியங்களில் பதிவாகி உள்ள பான்மைகளையும்; மெல்ல மெல்ல தொன்மங்களாகத் தோற்றரவு கண்டு சமய இலக்கியங்களில் தெய்வ ஆடல்களாக விரவிக் கிடக்கும் நிலைகளையும்; நிகழ்காலத்தில் ஊர் மாறி, பெயர் மாறி உருமாறி நிற்கும் சூழல்களையும் நூல் விரித்துரைக்கின்றது.
இத்தகு சிறப்புக்கள் பெற்ற நம் முன்னோர் வளர்த்தெடுத்த கூத்துக்களும் ஆடல்களும் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன. ஆயின், இவைதாம் மொழி, இலக்கியங்களின் காலக் கண்ணாடி என்பதனை இன்றைய வழித்தோன்றல்களுக்கும், மாணாக்கர்க்கும், ஆய்வாளர்களுக்கும், ஆர்வலர் உலகிற்கும் உணர்த்தும் வண்ணமாய்ப் பூவேந்தன் பதிப்பகத்தின் சிறு முயற்சியே நாட்டுப்புறக் கலைகள்: கூத்துக்கள் ஆடல்கள் என்னும் இந்நூல்.
Be the first to rate this book.