2012ஆம் ஆண்டு தொடங்கி 2018ஆம் வரை தான் எழுதியனவற்றுள் 32 கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக்கியுள்ளார். நண்பர் டான் அசோக். இந்நூலின் நடை என்பது நவீனமானது என்று சொல்ல வேண்டும். வெகு மக்களை விட்டு விலகாமல், அங்கங்கே திரைப்பட எடுத்துக்காட்டுகள் இடம்பெற்றுள்ளன. கோபம் பல இடங்களில் நையாண்டியாக வெளிப்படுகிறது. சில கேள்விகள் எதிர்க் கருத்துடையோரின் கன்னங்களில் அறைவதுபோல் இருக்கின்றன. நூலின் தலைப்பே ஒருவிதமான கிண்டல்தான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அரசியல், சமூகம், திரைப்படங்களைத் தாண்டி, பிக் பாஸ் வரையில் அசோக்கின் பார்வை நீள்கிறது.
‘நாட்டை விட்டுப் போகமாட்டேன்’ என்று சொல்லும் இந்நூல் நாட்டுக்குள்ளும் ஒவ்வொருவரின் வீட்டுக்குள்ளும் போகவேண்டிய நூல்!
- பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
Be the first to rate this book.